தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான ஸ்நோலின் தனது தாய் மீது கொண்டிருந்த அன்பை கவிதையாக வடித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22ஆம் தேதி போராட்டம் நடைப்பெற்றது. இந்தப்போராட்டத்தின் போது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கல்வீச்சு சம்பவம் நடைப்பெற்றது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் செவிலியர் படிப்பு படிக்கும் 17 வயது மாணவி ஸ்னோலின் துப்பாக்கிகுண்டுக்கு இரையானார். தன் மண்ணுக்கும் மக்களின் நலனுக்காகவும் போராட்ட களம் கண்டுள்ளார் ஸ்நோலின். வீறுநடை போட்டு முன் வரிசையில் சென்றவர் இறுதியில் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகி விட்டார்.
ஸ்னோலின், தனது தாய் மீது கொண்டிருந்த அன்பை கவிதையாக வடித்துள்ளார். இன்னமும் தூங்கி எழுந்ததும் அம்மாவின் முகத்தில்தான் விழிக்க ஆசைப்படுகிறேன் என்று ஆரம்பிக்கும் அந்த கவிதையில், தூங்கும் முன் அம்மாவை இமைக்காமல் பார்த்துவிட்டே தூங்குவதாகவும், தூக்கத்திலேயே உயிர் பிரிந்தாலும் கடைசியாக பார்த்தது அம்மாவின் முகமாகத்தான் இருக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டிருக்கிறார் ஸ்னோலின். இப்படி அன்பைக்கொட்டி அம்மாவைச் சுற்றி வந்த பெண்தான், தன் மண்ணிற்காக போராடி, துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகிவிட்டார்.