திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Published on

திருவாரூர் தொகுதிக்கு நடைபெறவிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் தேர்தல் பணிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறும் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி தேதி நடைபெறும் என அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் அறிவிக்கும் பணியில் மும்முரம் காட்டின. திமுக சார்பில் பூண்டி கலைவானன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் அறிவிக்கப்படவில்லை. அமமுக சார்பில் கமராஜ் அறிவிக்கப்பட்டார். இதுதவிர நாம் தமிழர் கட்சியும் தங்கள் வேட்பாளரை அறிவித்திருந்தது. ஆனால் தேர்தல் நடைபெறுவதில் சில சர்ச்சைகள் எழுந்தன. மற்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்தாமல் திமுக தொகுதியான திருவாரூருக்கு தேர்தல் நடத்துவது ஏன்? என கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன் திருவாரூர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அதிக பாதிப்பை கொண்ட மாவட்டமாகவும் கருதப்படுகிறது. அங்கிருக்கும் மக்கள் கடும் பாதிப்பில் இருப்பதாகவும், அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டது. பெரும்பாலானோரிடம் வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லையென்றும் கூறப்பட்டது. 

இந்த சூழலில் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக அனைத்து கட்சிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிமுக, திமுக, சிபிஎம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது, கஜா புயல் நிவாரணப் பணிகள் நிறைவடைந்த பிறகு இடைத்தேர்தலை நடத்தலாம் என கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக, திமுக, சிபிஎம் கட்சிகள் வலியுறுத்தின. இதிலிருந்து அதிமுகவும், திமுகவும் கூட இந்த தேர்தல் தற்போது நடத்தப்படுவதை விரும்பவில்லை என்பதை உறுதி செய்தது.

அவர்களின் கருத்துக்கு ஏற்பவாறு தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com