ஆசியாவிலேயே பெரிய தேராகக் கருதப்படும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் ஆழித்தேர் 96 அடி உயரமும் 31 அடி அகலமும் 300 டன் எடையும் கொண்டது. ஆழித்தேருக்காக 30 அடி உயரத்திலான மரத்தேர் முடிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு மேல் பனஞ்சப்பை, மூங்கில்கள், தேர்ச்சீலைகள் அமைக்கப்படும். ஆழித்தேருக் கான 4 பெரிய குதிரைகள் கும்பகோணத்தில் தயார் செய்யப்பட்டுள்ளன.
தேர் நான்கு மாட வீதிகளில் வரும் பொழுது குதிரைகள் அசையும் அழகு காண்பதற்கு கன்கொள்ளா காட்சியாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுதவிர சுப்பிரமணியர், விநாயகர், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியத் தேர்களும் ஆழித் தேரோட்டத்தின் போது நான்கு மாடவீதிகளை வலம்வர உள்ளன.
இந்தத் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.