“தேர்தல் வேண்டாமென நாங்கள் நினைக்கவில்லை; ஆனால்..” - பூண்டி கலைவாணன்

“தேர்தல் வேண்டாமென நாங்கள் நினைக்கவில்லை; ஆனால்..” - பூண்டி கலைவாணன்
“தேர்தல் வேண்டாமென நாங்கள் நினைக்கவில்லை; ஆனால்..” - பூண்டி கலைவாணன்
Published on

திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கருத்து திமுகவிற்கு இல்லையென அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்தார்.

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய பூண்டி கலைவாணன், “பாஜக இந்த தேர்தல் குறித்து ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆலோசனை செய்துகொண்டிருக்கிறோம் என்றார்கள். ஆளுகின்ற அதிமுக வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. வேட்பாளர் தேர்வு நடத்தப்பட்டு ஓரிரு நாளில் அறிவிக்கிறோம் என தெரிவித்திருந்தார்கள். எங்கள் தரப்பில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற கருத்து கிடையாது. ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க வேண்டும் என்பதே எங்கள் தலைவர் ஸ்டாலின் எண்ணமாக இருந்தது. அதுவும் தேர்தலை காரணம் காட்டி நிவாரணப் பணிகளை நிறுத்திவிடுவார்கள் என்பதற்காகத்தான்” என்று தெரிவித்தார்.  

இதற்கு முன்னர், திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் தேர்தல் பணிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறும் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு முன்னர், திருவாரூர் இடைத்தேர்தல் ஜனவரி 28ஆம் தேதி தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததும், இதனால் திமுக, அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com