திருவாரூர் மாவட்டத்தில் மார்கழி மாதம் முழுவதும் நடந்த பஜனை வழிபாடு இன்றோடு நிறைவு பெற்றது.
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மார்கழி மாதம் முழுவதும் அந்த பகுதிகளில் வசிக்கும் சிறுவர்கள், பெரியவர்கள் அதிகாலையில் எழுந்து வீதிகள் தோறும் சுற்றிவந்து தெய்வ பாடல்களை பாடி இறைவனை வழிபடுவார்கள்.
அதேபோல் திருவாரூர் மாவட்டம் மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த ஊரில் உள்ள பெரியவர்கள் சிறுவர்கள் தொடர்ந்து மார்கழி மாத அதிகாலையில் எழுந்து ஊரை சுற்றிவந்து பாடி இறைவனை வழிபட்டு வந்தார்கள்.
இந்நிலையில், தனது சிறுவயது முதல் கடந்த கடந்த 80 ஆண்டுகளாக பாடி வரும் ராமு என்பவரின் தலைமையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பஜனை நடைபெற்றது. அவர் மறைந்த பிறகு அவருடைய பெயரில் ராமு நினைவு பஜனை குழுவினர் தொடர்ந்து அந்த பணியை செய்து வருகின்றனர்.
மார்கழி மாதம் முழுவதும் ஊரை சுற்றிவந்து பாடி பஜனை செய்த குழுவினர் தை மாதம் முதல் நாளான இன்றோடு நிறைவு செய்தனர். இதையடுத்து ஊரிலுள்ள பெரியவர்கள் பஜனை குழுவினரக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தனர்.