திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெண் யானை ருக்கு நேற்றிரவு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது.
இதனையடுத்து ருக்குவை வடக்கு கோபுரம் அருகே அடக்கம் செய்ய அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யது வருகிறது. யானைஇறந்தால் அதனின் தந்தத்தை வனத்துறை அறுத்து எடுத்துவிடும். அதன், பின்பே யானை அடக்கம் செய்யப்படும். எனவே, திருவண்ணாமல மாவட்ட வனத்துறை அலுவலர் அர்ச்சனா தலைமையிலான 10 பேர் கொண்ட குழு, ருக்குவின் தந்தத்தை அறுத்தெடுப்பதற்காக கோயில் வந்துள்ளது.ஆனால், இதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ருக்குவின் தந்தத்தை அறுத்தெடுக்க அனுமதிக்க மாட்டோம், ருக்குவை அப்படியே புதைக்க வேண்டும் என்று தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளை தடுத்து வருகின்றனர்.
இதனால் இறந்த யானை ருக்குவின் உடலை புதைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.