சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு தினசரி இரவு 7.45 மணிக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் புறப்படுவதற்கான நேரம் நெருங்கியிருந்த நிலையில், 10வது நடைமேடையில் இருந்து ரயில் புறப்படத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதை நம்பி திருவனந்தபுரம் ரயில் பயணிகள், அந்த நடைமேடைக்குச் சென்றனர். ஆனால், அங்கு எந்த ரயிலும் இல்லாததால், எங்கு நிற்கிறது என குழப்பமும் அடைந்தனர். ஒருகட்டத்தில் பயணிகள் அங்குமிங்கும் அலைந்து திரிந்து பயணச்சீட்டு வழங்கும் இடத்திற்குச் சென்று முறையிடப்படப்பட்டது. இதையடுத்து நடைமேடை அறிவிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. தீபக் என்ற பயணி, உடனடியாக ரயில்வே ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து முறையிட்டதும், அந்நிர்வாகம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது. அறிவிப்பு குளறுபடியால் இரவு 7.45 மணிக்குப் புறப்பட வேண்டிய ரயில், சுமார் 1 மணி நேர தாமதத்துக்குப் பிறகு புறப்பட்டுச் சென்றது.
இதுகுறித்த தகவல்களை முழுவதுமாக அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.