தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காவி உடையில் திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருப்பதற்கு, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உலக தத்துவத்தை கூறிய வள்ளுவருக்கு காவி உடை தரித்து இளம் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைக்கத் தொடங்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள தங்கம் தென்னரசு, வள்ளுவருக்கு காவி வண்ணம் பூசும் கயமை தனத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் பிறப்பில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் மனுநீதி கும்பல் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசுவதை சகிக்க முடியாது என்றும், உடனடியாக தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் அதனை மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.