“உரிமைத் தொகை வரல சார்” - முதல்வர் காரை வழிமறித்து பெண்கள்! அடுத்த நொடியே... #ViralVideo

முதல்வரின் காரை வழிமறித்து மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்த பெண்கள் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை பகுதிக்கு பணி நிமித்தமாக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நேற்று சென்றிருந்தார். பணி முடித்துவிட்டு, நேற்றிரவு அங்கிருந்து காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் பகுதியில் நின்று இருந்த பெண்களை கண்டு முதல்வரின் கார் நின்றுள்ளது.

cm stalin
cm stalinpt desk

அப்போது அங்கிருந்த பெண்கள் சிலர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்தும் தங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கவில்லை என தமிழக முதல்வரிடம் முறையிட்டு கோரிக்கை வைத்தனர்.

மகளிர் உரிமைத்தொகை புகார்
’கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ - யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்; யாருக்கு கிடைக்காது?

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், உரியவர்கள் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவும், அப்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கவும் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரனிடம் கூறி விட்டு புறப்பட்டுச் சென்றார்.

இதனை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது அது வைரலாகி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com