கும்மிடிப்பூண்டியில் கோயில் நிர்வாகத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றதாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பிரசித்தி பெற்ற ஸ்ரீஎல்லையம்மன் கோயிலில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த கோயிலில் சுமார் ஒரு கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக புது கும்மிடிபூண்டியின் முக்கிய பகுதிகளில் ஓட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த சுவரொட்டியில், கோயில் நிர்வாகத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஊழல், மௌனம் காக்கும் இந்து அறநிலைத் துறை, ஆதாரங்களுடன் விரைவில் மக்கள் மன்றத்தில், தர்மகர்த்தாவை காப்பாற்றும் நபர் யார் என்ற வாசகங்கள்இடம் பெற்றுள்ளன. கும்பாபிஷேகம் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.