திருவாடானை: ‘பயிர் இழப்பீடு தொகை வேண்டும்’ - முற்றுகை போராட்டத்தில் விவசாயிகள்!

விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
பயிர் இழப்பீடு தொகை - திருவாடானை முற்றுகை போராட்டம்
பயிர் இழப்பீடு தொகை - திருவாடானை முற்றுகை போராட்டம்புதிய தலைமுறை
Published on

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் உள்ள விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு தொகையை வழங்கக்கோரி விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பயிர் இழப்பீடு தொகை - திருவாடானை முற்றுகை போராட்டம்
பயிர் இழப்பீடு தொகை - திருவாடானை முற்றுகை போராட்டம்புதிய தலைமுறை

இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததால் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கவாஸ்கர், ராஜா, தம்பிராசு ஆகியோர் தலைமையில் பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டு திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பயிர் இழப்பீடு தொகை வழங்காத HDFC, ERGO நிறுவனத்தையும், வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

பயிர் இழப்பீடு தொகை - திருவாடானை முற்றுகை போராட்டம்
பயிர் இழப்பீடு தொகை - திருவாடானை முற்றுகை போராட்டம்புதிய தலைமுறை

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்குக் கடந்த ஆறு மாதங்களாக வறட்சி நிவாரணம் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வந்ததால் தற்போது முதற்கட்டமாக விவசாயிகள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com