செய்தியாளர்: B.R.நரேஷ்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகப்பா நகரில் மகேஷ் என்பரின் வீட்டில் திருவாலங்காடு ஒன்றியம், தாழவேடு காலனியைச் சேர்ந்த பிரேம்குமார் (32), அவரது மனைவி நிர்மலா. அவர்களின் 2 ஆண் குழந்தைகள் அடுக்குமாடி வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 5ம் தேதி நள்ளிரவு அடுக்குமாடி குடியிருப்பின் வாசல் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த 3 இருசக்கர வாகனங்கள் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்து
இதையடுத்து கரும்புகை சூழ்ந்துக் கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து குழந்தைகளுடன் தப்பிச் செல்ல முயன்றபோது, பிரேம் குமார் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் தீயில் சிக்கி உடல் கருகிய நிலையில், கடந்த 6ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், 2 கடந்த 8ஆம் தேதி தாயும், இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை கே.எம்சி மருத்துவமனையில் 8 நாட்களாக உயிருக்கு போராடி வந்த பிரேம்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்தத கணவன், மனைவி 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்து தொடர்பாக திருத்தணி போலீசார், வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.