திருப்பதி லட்டு விவகாரம்| திண்டுக்கல் நெய் நிறுவனத்தில் 14 மணி நேரம் நடந்த ஆய்வு–ஆவணங்கள் சிக்கியதா?

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமனம் செய்த 3 அதிகாரிகள் உட்பட 14 பேர் திண்டுக்கல் ஏஆர் டெய்ரி நிறுவனத்தில் 14 மணி நேரம் ஆய்வு நடத்தினர்.
சோதனை நடத்தப்பட்ட நிறுவனம், திருப்பதி லட்டு தயாரிப்பு
சோதனை நடத்தப்பட்ட நிறுவனம், திருப்பதி லட்டு தயாரிப்புpt web
Published on

செய்தியாளர்: காளிராஜன் த

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த லட்டு தயாரிப்பதற்குத் பயன்படுத்தப்படும் நெய் திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

ஆவணங்களை எடுத்துச் சென்ற அதிகாரிகள்
ஆவணங்களை எடுத்துச் சென்ற அதிகாரிகள்pt desk

திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட நெய்:

இந்நிலையில் திருப்பதி லட்டு தயாரிப்பில் புகார்கள் எழுந்ததை அடுத்து லட்டு, குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு முடிவில் நெய்யில் விலங்குகள் கொழுப்பு இருப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சோதனை நடத்தப்பட்ட நிறுவனம், திருப்பதி லட்டு தயாரிப்பு
தவெக மாநாடு | உதவிய கைகளுக்கு அழகுபார்த்த விஜய்.. சத்தமே இல்லாமல் செய்த சம்பவம்!

நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்ததாக புகார்:

இதையடுத்து திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் சார்பாக வழக்கு தொடரப்பட்டு இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் ஆந்திர அரசு லட்டு விவகாரம் தொடர்பாக 5 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைத்தது. அந்த குழுவும் விசாரணை மேற்கொண்டு வந்தது.

திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரி
திண்டுக்கல் ஏ.ஆர் டெய்ரிpt desk

5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவை அமைத்த உச்ச நீதிமன்றம்:

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஆந்திர அரசால் அமைக்கப்பட்ட குழுவை கலைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மத்திய அதிகாரிகள் மற்றும் மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சார்பில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்து முறையாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தது.

சோதனை நடத்தப்பட்ட நிறுவனம், திருப்பதி லட்டு தயாரிப்பு
”அவதூறாக பகிரப்பட்ட வீடியோக்கள், கற்பனை பேட்டிகளை நீக்க வேண்டும்” ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் நோட்டீஸ்!

14 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற ஆய்வு:

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவைச் சேர்ந்த அதிகாரி, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி என 3 அதிகாரிகள் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவினர் நேற்று மதியம் 12 மணி முதல் திண்டுக்கல்லில் உள்ள ஏஆர் டெய்ரி நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 14 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற ஆய்வு மற்றும் விசாரணை முடிவடைந்துள்ளது.

ஆவணங்களை எடுத்துச் சென்ற அதிகாரிகள்
ஆவணங்களை எடுத்துச் சென்ற அதிகாரிகள்pt desk

இதையடுத்து ஆய்விற்கு வந்த அதிகாரிகள் பல்வேறு பொருட்களை ஆய்விற்காக எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், கணக்குகள் ஏடுகள் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் சேகரித்து எடுத்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com