ஸ்டெர்லைட் விவகாரம்: அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காதது ஏன்?- திருமாவளவன்

ஸ்டெர்லைட் விவகாரம்: அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காதது ஏன்?- திருமாவளவன்
ஸ்டெர்லைட் விவகாரம்: அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காதது ஏன்?- திருமாவளவன்
Published on

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு தொடர்பான அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? என விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரும் வேதாந்தாவின் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று முக்கிய விசாரணை நடத்தவுள்ளது. இந்த வழக்கின் உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஸ்டெர்லைட்டை அனுமதிக்கலாம் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் பெரும்பாலான கட்சிகள் கருத்து தெரிவித்தது.

ஆரம்பத்திலிருந்தே ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக கருத்துத் தெரிவித்துவந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

i

இதுகுறித்து பேசிய அவர், ‘’ஆக்சிஜன் உற்பத்தியைவிட ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான கூட்டமாக உள்ளது. மிகவும் நெருக்கடியான காலச்சூழலில் நாம் இருக்கிறோம்; ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடே தவிக்கிறது. அதேசமயம் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்காதது ஏன் என தெரியவில்லை’’ என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவிடலாம் என முடிவு செய்ததுபோல் உள்ளது. காற்றை நச்சாக்கிய நிறுவனத்திடமே ஆக்சிஜன் உற்பத்தி கோருவது முரணானது. ஆனால் ஸ்டெர்லைட்டை திறக்க உடன்பாடு இல்லையெனினும் ஆக்சிஜன் உற்பத்திக்காக வரவேற்கிறேன் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com