பிரபஞ்சன் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும்: திருமாவளவன்

பிரபஞ்சன் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும்: திருமாவளவன்
பிரபஞ்சன் நூல்களை நாட்டுடமை ஆக்க வேண்டும்: திருமாவளவன்
Published on

’’மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் நூல்களை தமிழக அரசும், புதுச்சேரி அரசும் நாட்டுமைமையாக்க வேண்டும்’’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் (73) புதுச்சேரியை சேர்ந்தவர். 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை கொடுத்துள்ள இவர், ‘வானம் வசப்படும்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார். இதுதவிர தமிழக மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருது உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் புதுச்சேரி மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் உயிரிழந்தார். 

அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் புதுச்சேரியில் இன்று மாலை நடக்கிறது. புதுச்சேரி பாரதி வீதியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக அவர்‌ உடல் வைக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவர் உடலுக்கு இன்று காலை தேசியக்கொடி போர்த்தி, அரசு மரியாதை செய்யப்பட்டது. புதுச்சேரி முதலமைச்சர் நாராய ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழ் அறி ஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் அஞ்‌சலி செலுத்தி வருகின்றனர்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறும்போது, ’’பிரபஞ்சனின் மறைவு எழுத்தாளர் சமூகத்திற்கும், புதுச்சேரிக்கும் பேரிழப்பு. புத்தகங்கள் மூலம் பிரபஞ்சனின் புகழ் நீடிக்கும் ’’  என்றார். 

அவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், தொல்.திருமாவளவன், ‘’ஜனநாயகத் திற்காக, பெண்ணுரிமைக்காக போராடிய எழுத்துப் போராளியை நாம் இழந்துவிட்டோம். அவர் நூல்களை தமிழக அரசும், புதுச்சேரி அரசும் நாட்டுமைமையாக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com