நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களில், ஒரு சில பிரிவினருக்கு ஊதியம் தாமதமாக வழங்கப்படுவதாக வெளியாகும் செய்தி, மிகவும் வருத்தம் அளிக்கும் செயல் என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஏற்படும் பின் விளைவுகள் கடுமையாக இருப்பதோடு, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார். நூறு நாள் வேலைத்திட்டத்தின் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள புதிய நடைமுறையில் இருக்கும் சாதக, பாதங்களை மத்திய அரசிடம் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை, மாநில அரசிற்கு உள்ளதாக ஓ.பன்னீசெல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.