ரேஷன் கடைகளில் மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்த அரசு தமிழக உணவுத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்த தமிழக உணவுத் துறை முடிவெடுத்துள்ளது.தமிழக ரேஷன் கடைகளில் உளுந்தம் பருப்பு விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், அதற்கு மாற்றாக துவரம் பருப்பு, கனடியன் லெண்டில் மற்றும் மசூர் பருப்பு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. மசூர் பருப்பு நச்சுத்தன்மை கொண்டது என்றும், இதனால் பல்வேறு நோய்கள் வரக்கூடும் என புகார் எழுந்தது. இந்நிலையில் மசூர் பருப்பு விநியோகத்தை நிறுத்த உணவுத்துறை முடிவெடுத்துள்ளது