கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் ஜூன், ஜூலை, செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களில் தமிழகத்துக்கு சுமார் 102 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா அரசு வழங்க வேண்டும். ஆனால், தற்போது வரை 31 புள்ளி 6 டிஎம்சி தண்ணீர் வழங்காமல் நிலுவையில் உள்ளது. அண்மையில் டெல்லியில் நடந்த காவிர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்துக்கான தண்ணீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடகா அரசு மெத்தனமாக உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கர்நாடாக அணைகளில் 95 சதவிகிதத்திற்கும் மேல் தண்ணீர் உள்ளபோதும், உபரி நீரை மட்டுமே காவிரி ஆற்றில் திறந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கான தண்ணீரை கர்நாடகா உடனே காவிரி ஆற்றில் திறந்துவிடக் கோரிக்கை எழுந்துள்ளது.