தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
Published on


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற பிற மாவட்டங்களிலும், புதுவை காரைக்காலில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஷியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்):

திருமயம் (புதுக்கோட்டை) 10, தேவகோட்டை (சிவகங்கை) 9, திருப்பத்தூர் (சிவகங்கை) 8, அரிமளம் (புதுக்கோட்டை), அம்பத்தூர் (திருவள்ளூர்) தலா 6, புதுக்கோட்டை, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) தலா 5, காரைக்குடி (சிவகங்கை), வாடிப்பட்டி (மதுரை), மருங்காபுரி (திருச்சி) தலா 4, ஈரோடு, வேடசந்தூர் (திண்டுக்கல்), சூளகிரி (கிருஷ்ணகிரி), உதகமண்டலம் (நீலகிரி), சுலாங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) தலா 3 என பதிவாகி உள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனத் தெரிவித்துள்ளது. ஆனால், தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி 26.09.2020 இரவு 11:30 மணி வரை கடல் உயர் 1.8 முதல் 2.8 மீட்டர் வரை எழும்பக்கூடும் என கடல் உயர்அலை முன்னறிவிப்பு விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com