ஏலம் விடப்படும் உள்ளாட்சி பதவிகள் - வெளியாகும் அடுக்கடுக்கான புகார்கள்

ஏலம் விடப்படும் உள்ளாட்சி பதவிகள் - வெளியாகும் அடுக்கடுக்கான புகார்கள்
ஏலம் விடப்படும் உள்ளாட்சி பதவிகள் - வெளியாகும் அடுக்கடுக்கான புகார்கள்
Published on

உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் சில ஊர்களில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ளது, மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம். இந்த ஊராட்சி ஒன்றியத்தில்தான் வலையூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் பெயரில் ரூ 14 லட்சமும், ஊராட்சி தலைவர் பதவிக்கு ரெங்கராஜ் என்பவர் பெயரில் ரூ. 10 லட்சமும், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பதவிக்கு ஆனந்த் என்பவர் பெயரில்  ரூ2.92 லட்சமும் ஏலம் விடப்பட்டதாக மண்ணச்சநல்லூர் ஒன்றிய தேர்தல் வார்டு அலுவலர் சண்முகம் என்பவரிடம் அப்பகுதியினர் புகார் மனு கொடுத்தனர்.

வாலையூர், பாலையூர், ஸ்ரீபெரம்பதூர், நெ.94 கரியமாணிக்கம் ஆகிய பகுதியை உள்ளடக்கிய ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வாலையூர் ஊராட்சியில்  மட்டும் நேற்று இரவு ரகசியமாக ஏலம் விடப்பட்டுள்ளது. அதில் தலைவர் பதவிக்கு ரூ10 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ 3 லட்சமும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ரூ. 14 லட்சமும் ஏலம் விடப்பட்டுள்ளது.

இதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ 16 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக ஆட்சியரை சந்தித்து கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த ஏலத்தை தடுத்து நிறுத்தி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com