மதுரையில் புகழ்பெற்ற தெப்பத் திருவிழா நிகழ்ச்சிக்காக கண் கவரும் வகையில் மாரியம்மன் தெப்பக்குளம் மின்னொளியில் ஜொலிக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தைப்பூசம் வரும் 18ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி கடந்த 26ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் மாரியம்மன் தெப்பக்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு சிறு மண்டபங்கள் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்ணை கவரும் வகையில் ஜொலிக்கிறது. குளம் தூர்வாரப்பட்டு 250 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது.
இதைத் தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள தெப்பத்தில் எழுந்தருளி அம்மனும், சுவாமியும் தெப்பக்குளத்தை வலம் வருவதை காண பக்தர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.