குளித்தலை அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழா நடைபெற்றது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ளது அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில். காவிரி தென்கரையில் அமைந்துள்ள இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளத்திற்கு வரும் நீர்வழி பாதைகளையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்றியதால் மழைநீர் நிரம்பி வழிந்தது,
இதனைத் தொடர்ந்து கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழா நடத்த தனி குழுக்கள் அமைத்து, கோயில் உதவி ஆணையர் சூரியநாராயணன் மற்றும் செயல் அலுவலர் ஆட்சி பிரகாசம் மற்றும் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் ஆகியோர் தலைமையில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது,
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழா நடைபெற்றது அய்யர்மலை சுற்றுவட்டார கிராம மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.