பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!

பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
Published on

தேனியில் பெட்ரோலுக்கு கடன் கேட்டு கனரா வங்கியில் மனு கொடுத்து இளைஞர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.

பெட்ரோல் டீசலுக்கான வரியை மத்திய மாநில அரசுகள் உயர்த்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருந்தும் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேனி மாவட்ட மாணவரணி சார்பாக இளைஞர்கள் தேனி அல்லிநகரத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட கனரா வங்கியில் மனு அளித்தனர். அந்த மனுவில், 'கொரோனா தொற்று காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீது மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள வரி உயர்வால் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கல்விக் கடன், வாகனக் கடன் வழங்குவது போல், நாட்டு மக்களின் அத்தியாவசிய தேவையான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்கு தனிநபர் கடன் வழங்க வேண்டும் என வங்கி மேலாளரிடம் மனு அளித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com