தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளரே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காட்சிகள் புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ளது.
அந்த காட்சியில் நோயாளி ஒருவருக்கு செலுத்தப்படும் குளுகோஸை துப்புரவுப் பணியாளரே மாற்றுவது பதிவாகியுள்ளது. இதை அந்த நோயாளியின் உறவினர் ஒருவர் மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். அந்த துப்புரவுப் பணியாளர் குளுகோசை தவறாக செலுத்தியதால் நோயாளி பாதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாததே இதுபோன்ற சம்பவங்கள் நிகழக் காரணம் என அங்கு பணிபுரியும் ஊழியர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பவம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.