செய்தியாளர: மலைச்சாமி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி - வத்தலகுண்டு சாலையில் சிலுக்குவார்பட்டி, அணைக்கரைப்பட்டி, புள்ளிமான் கோம்பை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் வசிக்கும் மாணவர்கள், ஆண்டிப்பட்டி நகரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் தனியார் கல்லூரிகளிலும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவ மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இல்லாததால், பள்ளிக்கு தாமதமாக செல்லாமல் இருக்கவும், மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியவாறு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு முன்வர வேண்டும் என்று மாணவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.