வறுமையின் காரணமாக தற்கொலையா? - மூவர் உயிரிழப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்

வறுமையின் காரணமாக தற்கொலையா? - மூவர் உயிரிழப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்
வறுமையின் காரணமாக தற்கொலையா? - மூவர் உயிரிழப்பு சம்பவத்தில் திடீர் திருப்பம்
Published on

தேனி மாவட்டம் போடியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடும்ப வறுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

அவர்கள் மூவரை தற்கொலைக்கு தூண்டியதாக தற்கொலை செய்து கொண்டு இறந்த லட்சுமியின் அண்ணன் முருகன் என்பவரின் புகாரின் பேரில்  லட்சுமியின் உறவினர்களான பாண்டி, தனலட்சுமி, விஜயகுமார், செல்லத்தாய் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை போடி நகர காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தேனி மாவட்டம் போடியிலுள்ள ஜேகே பட்டியில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தனது மூன்று பிள்ளைகளுடன் விஷம் அருந்தி லட்சுமி என்பவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் தாய் லட்சுமி மற்றும் அவரது மூத்த மகள் அனுஷ்யா, இரண்டாவது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மூன்றாவது மகள் அக்‌ஷயா தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

(தற்கொலைக்கு தூண்டியவர் மற்றும் தலைமறைவாக உள்ள அம்பிகா)

இந்நிலையில் மூன்றாவது மகள் அக்‍ஷயா இரண்டு நாட்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து 
தனது தாய் மாமன் முருகன் என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளார். தாய்மாமன் முருகன் குழந்தையிடம் நடந்த விஷயங்களைக் கேட்டு அறிந்துள்ளார். குழந்தை அக்‍ஷயா சம்பவத்துக்கு முதல் நாள் தற்கொலை செய்து கொண்ட தாய் லட்சுமியின்  உறவினர்களான பாண்டி, தனலட்சுமி, விஜயகுமார், செல்லத்தாய், அம்பிகா ஆகிய 5 நபர்கள் வீட்டிற்கு வந்து மிரட்டியதாக சிறுமி அக்‍ஷயா கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, தாய்மாமன் முருகன் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து போடி நகர் காவல் ஆய்வாளர் வெங்கடாசலபதி சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணை மேற்கொண்டார். அவரிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாண்டியன், தன லட்சுமி, விஜயகுமார், செல்லத்தாயி ஆகிய 4 நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள அம்பிகாவை தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com