தேனி: கர்னல் ஜான் பென்னிகுவிக் 183வது பிறந்த நாள் - பொங்கல் வைத்து கொண்டாடிய கிராம மக்கள்!

முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 183வது பிறந்த நாளை 25 ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடி வரும் கிராம மக்கள்.
John Pennycuick Birthday
John Pennycuick Birthdaypt desk
Published on

செய்தியாளர்: திருக்குமார்

தேனி மாவட்டம் போடி அருகே பாலார்பட்டி கிராமத்தில் வருடந்தோறும் தை திருநாளான இதே நாளில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்த நாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

John Pennycuick Birthday
John Pennycuick Birthdaypt desk

இந்நிலையில், இந்த ஆண்டும் தை திருநாளான இன்று ஜான் பென்னிகுவிக் இன் 183-வது பிறந்த நாளை முன்னிட்டு பாலார்பட்டி கிராமத்தில், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இசை வாத்தியங்களுடன் சிலம்பாட்டம் மற்றும் தேவராட்டம் ஆடியபடி வந்தனர். ஜான் பென்னிகுவிக்கின் உருவப்படத்தை கைகளில் ஏந்தியவாறு ஜல்லிக்கட்டு காளைகள், குதிரை, முட்டு கிடா மற்றும் பொங்கல் பானைகளுடன் கிராமம் முழுவதும் ஊர்வலமாக வந்தனர்.

இதையடுத்து இங்குள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக்ன் நினைவு கலையரங்கம் முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் பொங்கல் வைத்தனர். பின்னர் ஜான் பென்னிகுவிக்கின் திருவுருவ படத்திற்கு கிராம மக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கினர்.

முன்னதாக திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாட்டு வண்டியில் கிராம மக்களுடன் ஊர்வலமாக வந்து கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

John Pennycuick Birthday
John Pennycuick Birthdaypt desk

5 மாவட்ட விவசாயிகளின் நீராதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கை தாங்கள் கடவுளாகவே வணங்கி வருகிறோம். எங்களது பாலார்பட்டி கிராமத்தில் 25 வருடங்களாக அவரது பிறந்த நாளை பொங்கல் விழாவாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறோம் எங்களின் மனித கடவுளான ஜான் பென்னிகுவிக்கை எத்தனை தலைமுறைகள் வந்தாலும், அவரை மறக்காமல் கடவுளாக கொண்டாடுவோம். என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com