ஒரு லட்சம் மலர்களுடன் தேக்கடி மலர் கண்காட்சி மிகச் சிறப்பாக தொடங்கியுள்ளது.
12வது ஆண்டாக இந்த ஆண்டும் தேக்கடி மலர் கண்காட்சி துவங்கியுள்ளது. 300 வகை, ஒரு லட்சத்திற்கும் அதிகமான மலர்கள் காட்சிக்கு வைகப்பட்டுள்ளன. திரும்பும் திசை எல்லாம் பூக்கள். அழகழகான வண்ண மலர்கள் என இதன் அழகு பார்ப்பவர் கண்களை கவர்த்து வருகிறது.
குமுளி ஊராட்சி, தேக்கடி தோட்டக்கலை கூட்டமைப்பு மற்றும் தேக்கடி மண்ணார்த்தரையிலுள்ள நர்சரி இவைகள் இணைந்து இக்கண்காட்சியை நடத்துகின்றன. இந்த மலர் கண்காட்சிக்கு நுழைவுக்கட்டணம் 30 ரூபாய். பெரியவர்கள் உடன் அழைத்து வரப்படும் ஐந்து வயதிற்கு கீழ் உள்ள குட்டீஸ்களுக்கு இலவச அனுமதி. மலர்களோடு சேர்த்து ஏராளாமான பொழுதுபோக்கு அம்சங்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க தனித்தனி கடைகள், மாலை நேரங்களில் ஆடல் பாடல், இன்னிசை கலை நிகழ்ச்சி கூடவே சைவ அசைவ உணவகம் எனக் கண்காட்சி விறுவிறுப்பு அடைந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்தக் கண்காட்சி ஏப்ரல் 15 வரை நடைபெற உள்ளது.
படங்கள்: விஸ்வன்