நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளையில் அரசுக்கு சொந்தமான டாஸ்மார்க் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையை நேற்று இரவு 10 மணிக்கு பூட்டிவிட்டு அதன் சூப்பர்வைசர்கள் சென்று விட்டனர். பின்பு கடையின் முன்பு தியாகராஜன் காவலாளி படுத்திருந்தார்.
அப்போது அதிகாலை 4 மணி அளவில் 3 பேர் கம்பிகளுடன் அங்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த காவலாளியை எழுப்பி உள்ளனர். பின்பு ஒருவர் அவரை அருகில் உள்ள தோட்டத்திற்கு அழைத்து சென்று விட்டார்.
மேலும் அங்கிருந்த இருவர் தாங்கள் கொண்டு வந்த கம்பியால் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்பு அங்கிருந்து மூன்று சாக்குகளில் மது பாட்டில்களை எடுத்துள்ளனர். ஆனால் அங்கு வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுக்கவில்லை. பின்பு அவர்கள் கடையில் இருந்து வெளியே கொண்டு வந்த மூன்று சாக்கு மது பாட்டில்களில் ஒரு சாக்கை காவலாளியிடம் கொடுத்து கொடுத்துள்ளார்.
அதில் 10 மது பாட்டில்கள் இருந்தன. காவலாளியிடம் அவற்றை தலா 200 ரூபாய் வைத்து வி்ற்று கொள்ளும்படி இந்த திருடர்கள் கொடுத்துவிட்டு கூறி சென்றனர். மேலும் தகவல் யாருக்கும் தெரிவிக்க கூடாது என்பதற்காக காவலாளியின் செல்போனை பறித்தும் சென்றிருக்கிறார்கள்.
இதுகுறித்து பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அங்கு இருக்கக்கூடிய சிசிடிவி மூலமாகவும், பறித்து சென்ற சொல் போன் மூலமாகவும் திருட்டு ஈடுபட்ட மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் திருடி சென்ற மதுபாட்டில்களில் காவலாளிக்கும் பங்கு கொடுத்து சென்ற விசித்திர திருடர்களின் செயல் அப்பகுதி மக்களிடையே நகைப்புக்கு உள்ளாக்கி உள்ளது.