“என்னப்பா செருப்ப இழுத்து, இழுத்து நடக்குற?”.. சோதனை செய்த பின் மிரண்டு போன அதிகாரிகள்!

“என்னப்பா செருப்ப இழுத்து, இழுத்து நடக்குற?”.. சோதனை செய்த பின் மிரண்டு போன அதிகாரிகள்!
“என்னப்பா செருப்ப இழுத்து, இழுத்து நடக்குற?”.. சோதனை செய்த பின் மிரண்டு போன அதிகாரிகள்!
Published on

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கால் பாதத்தில் மறைத்து கடத்தி வந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு, சார்ஜாவில் இருந்து விமானம் வந்தது. பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த 30 வயது இளைஞர் வெளியில் நடந்து சென்றபோது, நடை சற்று வித்தியாசமாக இருந்தது. கால்களில் அணிந்திருந்த செருப்புகளை இழுத்து, இழுத்து நடந்து சென்றார்.

இதனால் சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசியதால் இளைஞரை சோதனை செய்தனர். அவரின் செருப்புகளை கழற்றிய போது கால் அடி பாதத்தில் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்டிருந்தது. அதைப் பிரித்து பாா்த்த போது தங்கப்பசை அடங்கிய சிறிய பாா்சலை இளைஞர் மறைத்து வைத்திருந்ததை சுங்க அலாகா கண்டுப்பிடித்தனா். 

இதையடுத்து இளைஞரின் இரு கால்களின் அடியில் இருந்து 240 கிராம் தங்கப்பசையை சுங்க இலாகா அதிகாரிகள் எடுத்தனர். இளைஞரிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இளைஞரை  கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com