பாலிவுட் நடிகர் பெயரில் பெண்களிடம் பல லட்சம் மோசடி - இளைஞர் கைது

பாலிவுட் நடிகர் பெயரில் பெண்களிடம் பல லட்சம் மோசடி - இளைஞர் கைது
பாலிவுட் நடிகர் பெயரில் பெண்களிடம் பல லட்சம் மோசடி - இளைஞர் கைது
Published on

பாலிவுட் நடிகரின் பெயரில் சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி, பெண்களை ஏமாற்றி மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலக அளவில் முக்கியமான சமூக வலைத்தளங்களாக ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை இருக்கின்றன. நடிகர், நடிகைகள் தொடங்கி பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரை இந்தச் சமூக வலைத்தளங்களில் இயங்கி வருகின்றனர். இந்த ஒவ்வொரு சமூக வலைத்தளத்திற்கு கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்கள் உள்ளனர். 

ஆனால் அதில் சிலர் போலியான கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில்கூட பேஸ்புக் நிறுவனம் சில போலி கணக்குகளை முடக்கியுள்ளது. இருப்பினும் அதனை முற்றிலும் கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொள்ளபட்டு வருகின்றன.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகள் மூலம் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மகேந்திரவர்மன் என்பவர் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்ளத்தில் பாலிவுட் நடிகர் அர்மான் மாலிக் பெயரில் போலிக் கணக்குகளை தொடங்கி, பெண்கள் ப‌லரிடம் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் நட்பாக பழகி வந்த பெண்களின் புகைப்படங்களை, மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளதாக தெரிகிறது. இதனால் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், கோவையில் மகேந்திரவர்மனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் பல பெண்களிடம் மோசடி செய்து லட்சக்கணக்கில் பணம் பறித்தது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com