"யாரும்மா நீ..நல்லா பேசிட்டு இருக்கறப்ப எழுந்திருக்காயே" அமைச்சர் திட்டியதால் அழுத பெண்

"யாரும்மா நீ..நல்லா பேசிட்டு இருக்கறப்ப எழுந்திருக்காயே" அமைச்சர் திட்டியதால் அழுத பெண்
"யாரும்மா நீ..நல்லா பேசிட்டு இருக்கறப்ப எழுந்திருக்காயே" அமைச்சர் திட்டியதால் அழுத பெண்
Published on

மதுரை உசிலம்பட்டியில் மேடையில் பேசிக்கொண்டிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் திட்டியதையடுத்து அரசு பெண் ஊழியர் அழுததால் அங்கு பரபரப்பு நிலவியது. 

தமிழக அரசின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் இன்று முதல் குடும்ப அடைடைதாரர்களுக்கு ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ2500 உடன் அரிசி,கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு வார்டிலிருந்தும் அரசு ஊழியர்கள் தலா 5 பயனாளிகளை அழைத்து வந்திருந்தனர். உசிலம்பட்டி கீழப்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தைச் சேர்ந்த அரசு பெண் ஊழியர் மேடைக்கு முன்னால் அமர்ந்திருந்தார். அமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த பெண், பயனாளிகளை வரிசைப்படுத்தவற்காக எழுந்தார்.

இதனால் கடுப்பான அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “யாரும்மா நீ.. நல்லா பேசிட்டு இருக்கறப்ப எழுந்திருக்காயே.. உனக்கும் எங்களுக்கும் ஏதும் வாய்க்கா தகராறா.. எதுன்னாலும் கூட்டம் முடிச்ச பிறகு பேசும்மா” எனக் கூறினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பெண் ஊழியர் அழ ஆரம்பித்தார். பொது இடமென்று பாராமல் அரசு பெண் ஊழியரை அமைச்சர் திட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com