பெண்ணின் கழுத்தில் பாய்ந்த கம்பி – வெற்றிகரமாக அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்!

பெண்ணின் கழுத்தில் பாய்ந்த கம்பி – வெற்றிகரமாக அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்!
பெண்ணின் கழுத்தில் பாய்ந்த கம்பி – வெற்றிகரமாக அகற்றிய கோவை அரசு மருத்துவர்கள்!
Published on

கோவையில் வலிப்பு வந்த பெண்ணின் கையில் இரும்பு கம்பியை கொடுத்த நிலையில், அந்த கம்பியால் கழுத்துப் பகுதியில் குத்தி கை, கால்கள் செயலிழந்த பெண்ணிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.

கடந்த 22-8-22 அன்று 28 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரின் கழுத்தின் முன் பகுதியில் இரும்பு கம்பி ஒன்று குத்தப்பட்ட நிலையில் கை கால்கள் செயலிலழந்தது. இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பெண்ணிற்கு வலிப்பு வந்தபோது அவர் கையில் கொடுக்கப்பட்ட கம்பி கழுத்தில் குத்தியதாக அவருடன் வந்த உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஸ்கேன் மற்றும் இதர பரிசோதனை முடிவில் கழுத்தில் வலது பக்கம் பாய்ந்த கம்பி மூச்சுக் குழாய் உணவு குழாய் மற்றும் ரத்த நாளங்களில் மிக அருகில் பாய்ந்து தண்டுவட எலும்பை துளைத்து குத்தி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மருத்துவமனை முதல்வர் நிர்மலா அவர்களின் ஆலோசனைப்படி நரம்பியல் அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் ஆகியோர் பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்து கழுத்தில் பாய்ந்த கம்பியை எந்தவித பாதிப்பும் இன்றி அகற்றினர்.

அறுவை சிகிச்சைக்குப் பின் அந்த பெண்ணின் கை கால்களின் இயக்கம் சீரடைந்து அதன் பின்னர் வீடு திரும்பியுள்ளார். இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவ குழுவினர்களை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா வெகுவாக பாராட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com