தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு – திருமாவளவன் பேச்சு

தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு – திருமாவளவன் பேச்சு
தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு – திருமாவளவன் பேச்சு
Published on

தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன் குறித்த திருமாவின் சிந்தனை கோட்பாடுகள் எனும் தலைப்பில் சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் ஜெ.பாரத் என்பவர் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திருமாவளவன் பங்கேற்று நூலை வெளியிட்டார்.

முன்னதாக, அம்பேத்கர் சட்டக் கல்லூரியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டனர். அதை தொடர்ந்து மேடையில் திருமாவளவன் பேசும்போது...

அரசியல் என்பது பதவிக்காக,, அதிகாரத்திற்காக பொருள் ஈட்டுவதற்கான வாய்ப்பு என்கிற உணர்வு இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. மிக மிகக் குறைந்த நபர்கள் தான் கொள்கை கோட்பாடுகள் குறித்து ஆர்வம் காட்டி விவாதிக்கிறார்கள், அனைத்து கட்சியிலும் இந்த நபர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளனர். ஆனால், அப்படிப்பட்டவர்கள் தான் முக்கிய பொறுப்புகளை பெற்று காட்சியை வழி நடத்துவார்கள்.

அடங்க மறுப்போம், அத்து மீறுவோம், திருப்பி அடிப்போம் என்பது கொள்கையா கோட்பாடா என கேள்வி எழுப்பிய திருமாவளவன், இது ஒரு செயல் திட்டம் என விளக்கம் அளித்தார். ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இவை மூன்றும் தான் உழைக்கும் மக்களுக்கு பகை. சாதி, முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் ,குடும்பம் என இவை எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒடுக்கப்படுகிற மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கொள்கை முழக்கம் தான் அடங்க மறுத்தல், அத்து மீறுதல், திருப்பி அடித்தல். இது வன்முறை முழக்கம் அல்ல, வன்முறைக்கு எதிரான முழக்கம். இது விடுதலைக்கான முழுக்கம், உலகில் ஒடுக்கு முறைக்கு உள்ளான அனைவருக்குமான முழக்கம் இது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com