இடுக்கி மாவட்டம் குமுளி அருகே வீட்டு முன் நிறுத்தி வைக்கப்படிருந்த கார் மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. காரில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், மாவட்டத்தின் பரவலாக பல பகுதிகளில் மரம் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டது. பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகினர். தற்போது கன மழை குறைந்தாலும் சாரல் மழை தொடர்ந்தவண்ணமே உள்ளது.
இந்நிலையில் குமுளி அருகே உள்ள ஆனவிலாசம் பகுதியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பென்னி என்பவரின் கார் மீது திடீரென மரம் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் கார் முழுவதுமாக சேதமடைந்தது, அதிர்ஷ்டவசமாக காரில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. வாடகை கார் ஓட்டி ஜீவனம் நடத்தி வரும் பென்னி, கார் சேதமடைந்ததால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இழப்பீடு வழங்கவும் இடுக்கி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளார்.