தலைமன்னார் டூ தனுஷ்கோடி: கடலில் நீந்தி கடக்க முயன்ற முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்

இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.
Tragedy
Tragedypt desk
Published on

செய்தியாளர்: அ.ஆனந்தன்

இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரமுள்ள பாக் ஜலசந்தி கடல் பகுதியை சமீப காலமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல நீச்சல் வீரர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்து வருகின்றனர்.

அப்படி தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை உள்ள கடல் பகுதியை நீந்திக் கடப்பதற்கு இந்தியா - இலங்கை என இருநாட்டு அரசிடம் உரிய அனுமதி பெற்று நேற்று 31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகுமூலம் புறப்பட்டு தலைமன்னார் சென்றடைந்தனர்.

Boat
Boatpt desk

இந்நிலையில், இன்றிரவு சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து தொடர் ஓட்டம் முறையில் நீந்தத் தொடங்கினர். அப்போது சரியாக மூன்று மணியளவில் தொடர் ஓட்ட நீந்துதலில் மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு நெஞ்சு வலி காரணமாக கோபால் ராவ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர். இதனையடுத்து கோபால் ராவ் உடலை தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வந்த பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Tragedy
கேக் சாப்பிட்ட பஞ்சாப் சிறுமி உயிரிழந்த விவகாரம் - கேக்கில் இருந்தது என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர். கோபால் ராவ் உயிரிழந்தது தொடர்பாக ராமேஸ்வரம் மரைன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com