சென்னைக்கு ரயிலில் வரும் தண்ணீர் : இன்று சோதனை ஓட்டம்

சென்னைக்கு ரயிலில் வரும் தண்ணீர் : இன்று சோதனை ஓட்டம்
சென்னைக்கு ரயிலில் வரும் தண்ணீர் : இன்று சோதனை ஓட்டம்
Published on

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கான பணிகள் முடிந்து, இன்று சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால், சென்னை மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் அல்லாடி வருகின்றனர். இந்தச் சூழலில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து தண்ணீர் வழங்க 65 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.


இதனையடுத்து மேட்டூரிலிருந்து கூட்டு குடிநீர்த் திட்டக் குழாய் மூலம் பாலாற்றுக்கு வரும் நீரை, குழாய்கள் மூலம் ஜோலார்பேட்டைக்கு கொண்டு வந்து அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதற்காக சென்னை குடிநீர் வாரியம், ரயில்வே துறை, காவிரி கூட்டு குடிநீர்த் திட்ட அதிகாரிகள் ஆ‌ய்வு நடத்தி பணிகளை செய்தனர். 

இந்நிலையில் குழாய்கள் பதிக்கும் பணிகள் அனைத்தும் முடிந்து, ஏற்கெனவே பொருத்தப்பட்டு ரயில் பெட்டிகளில் நீர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. இந்தச் சூழலில் இன்று சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து நீர் கொண்டு வரும் திட்டத்தை ஓரிரு நாட்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறைப்படி தொடக்கிவைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com