போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், சென்னை காவல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் மேலும் இரண்டு வாரம் அவகாசம் வழங்கியுள்ளது.
கொரோனா தொற்றுக்கு தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூறி போலி மருத்துவர் திருத்தணிகாச்சலம் சமூக வலைதளத்தில் பிரச்சாரம் செய்தார். இதனையடுத்து அவரை கைது செய்த தமிழக அரசு அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தது. திருத்தணிகாச்சலத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தந்தையான கலியபெருமாள் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருத்தணிகாச்சலம், சிவஞானம் மற்றும் புஷ்பா சத்தியநாராயணா . வைத்திய குடும்பத்தில் பிறந்து மருத்துவம் பார்த்தாலும், சித்த மருத்துவக் கவுன்சிலின் உரிய சான்றிதழ் இல்லாததால் அவர் போலி மருத்துவர் தான் என்றும் பரம்பரை மருத்துவர் என வழங்கப்படும் சான்றிதழ்களுக்கும் எந்த மதிப்பும் இல்லை என்றும் கூறினர்.
இதற்கு திருத்தணிகாலச்சலம் தரப்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிந்த வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும் ஆனால் தேவையில்லாமல் உள்நோக்குடன் போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து திருத்தணிகாசலத்தை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும், சென்னை காவல் ஆணையருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் மேலும் இரண்டு வாரம் அவகாசம் வழங்கி வழக்கை ஜூன் 23 வழக்கு ஒத்திவைத்துள்ளது.