வெட்டியதால் ‌மனைவி இறந்து விட்டதாக அச்சம்... மின்கம்பியை கடித்து கணவர் தற்கொலை

வெட்டியதால் ‌மனைவி இறந்து விட்டதாக அச்சம்... மின்கம்பியை கடித்து கணவர் தற்கொலை
வெட்டியதால் ‌மனைவி இறந்து விட்டதாக அச்சம்... மின்கம்பியை கடித்து  கணவர் தற்கொலை
Published on

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துக்கொண்டார். 
 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஜோதிநாயக்கணூரைச் சேர்ந்தவர் ராமர். ஊரின் அருகே தோட்டத்தில் உள்ள வீட்டில் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் இன்று காலை தனது மனைவி பஞ்சுவுடன் ஏற்பட்ட தகராறில் மனைவியை அறிவாளால் கழுத்துப்பகுதியில் ஆழமாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த தனது மனைவி இறந்துவிட்டாள் என்ற பயத்தில் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவமறிந்து விரைந்த வந்த எழுமலை போலிசார் பலத்த காயங்களுடன் இருந்த பஞ்சுவை உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் தற்கொலை செய்து கொண்ட ராமரின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமக்கிருஷ்ணன் விசாரனை நடத்தி வருகிறார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com