'தேசிய கல்விக்கொள்கை வேண்டாம் என்பதற்காகத்தான் மாநில கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி.
தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க, கல்வியாளர்கள், வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைத்து தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டிருந்தது. அந்தக் குழுவில் பல்வேறு பேராசிரியர்களும், கல்வியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, ஒரு வருடத்தில் கல்விக் கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேசிய கல்விக்கொள்கை வேண்டாம் என்பதற்காகத்தான் மாநில கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு உகந்த மாநில கல்விக்கொள்கை கொண்டுவரப்படும் என்றும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்ற கல்வியை முதலமைச்சர் தேர்வு செய்வார் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
தொடர்புடைய செய்தி: கணவர், மகன்களுக்கு தெரியாமல் இரவில் படிப்பு.. 10ம் வகுப்பில் 53 வயது பெண் அசத்தல்!