நேற்றைய நிலவரப்படி நெல்லை பெரியார் பேருந்து நிலையமானது 7 அடி உயரத்திற்கு மேல் வெள்ளநீரால் நிரம்பி நின்றது. பேருந்து நிலையம் மட்டுமல்லாது ரயில் நிலையங்களிலும் வெள்ளநீரானது நிரம்பி தண்டவாளங்கள் தண்ணீர் சூழ காட்சியளித்தன. ஆனால் தற்போது வெள்ளநீர் படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக நெல்லை பெரியார் பேருந்து நிலையத்தினை பொறுத்தவரை 80 சதவீத நீரானது வடியத் தொடங்கிவிட்டது. பள்ளமான பகுதிகளில் மட்டுமே தற்போது மழைநீரானது தேங்கியுள்ளது. அதேசமயம் மழையானது குறைந்து வருவதால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து வருகிறது.
முன்னதாக நீர் அதிகமாக தேங்கியிருந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது வெள்ளநீர் குறைந்து வருவதால் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் மழையினால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்வதற்கென்று இன்று பொது விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.