தீபாவளி சந்தையில் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

தீபாவளி சந்தையில் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை
தீபாவளி சந்தையில் 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை
Published on

தீபாவளி பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளதால் ஆட்டு வியாபாரிகள் மகிழ்ச்சி அடந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செட்டிபாளையம் பகுதியில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை கூடும். இச்சந்தையில் செஞ்சி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கொண்டுவரப்படும் ஆடுகளை நல்ல விலைக்கு விற்பது வழக்கம். இதனால் இச்சந்தை ஆடுகள் விற்பனைக் கூடாரமாக மாறியது. ஆகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் இச்சந்தை ஆடுகளை வாங்க குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்நோக்கியுள்ள தீபாவளி பண்டிகையையொட்டி  இறைச்சி விற்பனை அதிகமாக இருக்கும் என்பதால் வியாபாரிகள் இன்று சந்தைக்கு அதிக அளவில் வந்திருந்தனர். காலை 3 மணியிலிருந்து 10 மணி வரை நீடித்த சந்தையில் சுமார் 5 கோடிக்கு மேல் ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனை நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.  விவசாயிகள் வழக்கமாக விற்கப்படுகின்ற விலையைக் காட்டிலும் வாரச்சந்தையில் ரூ 1000 முதல் 2000 வரை விற்பனை அதிகரித்து உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இச்சந்தையில் இதுவரை சுமார் 50 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனையாகி உள்ளதாகவும் மாடுகள் சுமார் 30 ஆயிரம் வரை விற்பனையாகி உள்ளதாகவும் வியாரிகள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் கொண்டு வந்த ஆடு, மாடுகள் நல்ல விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர். வியாபாரிகளுக்கு போதிய அளவு ஆடு, மாடுகள் கிடைக்காததால் அதிக  விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் உள்ளதாக அவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com