‘நூறு ரூபாய் கூட வைக்க மாட்ட' - விரக்தியில் சுவற்றில் எழுதிச் சென்ற கொள்ளையர்கள்

‘நூறு ரூபாய் கூட வைக்க மாட்ட' - விரக்தியில் சுவற்றில் எழுதிச் சென்ற கொள்ளையர்கள்

‘நூறு ரூபாய் கூட வைக்க மாட்ட' - விரக்தியில் சுவற்றில் எழுதிச் சென்ற கொள்ளையர்கள்
Published on

திருப்பத்தூரில் திருட வந்த இடத்தில் எதுவும் கிடைக்காததால் விரக்தியில் ’நூறு ரூபாய் கூட வைக்க மாட்ட' என சுவற்றில் கொள்ளையன் எழுதிச் சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள ஏலகிரி மலை மஞ்சக்கொல்லை புதூர் கிராமத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கெஸ்ட் ஹவுஸ் பூட்டை உடைத்து திருட முயன்றனர். ஆனால் அங்கு எதுவும் கிடைக்காததால் சிசிடிவி கேமரா மற்றும் ஹார்டு டிஸ்கை திருடிச் சென்றனர் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து டிஐஜி காமினி தலைமையில் எஸ்பி விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று துரைமுருகனுக்கு சொந்தமான கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் 3 தனிப்படை அமைத்து மர்ம நபர்களை பிடிக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து துரைமுருகனுக்கு சொந்தமான கெஸ்ட்ஹவுஸ் அருகில் யார் யார் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளனர் என சோதனை மேற்கொண்டனர் அப்போது அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி தாளாளருக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு இருந்ததை கண்ட போலீசார் அங்கு ஆய்வு செய்தனர்.

அந்த வீட்டின் கீழ் தளத்தில் காவலுக்காக கணவன் மனைவி இருவர் இருந்தனர். முதல் தளத்தில் சென்று பார்த்தபோது அங்கும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. ஆனால் அங்கும் பணம் நகை மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த டிவியை உடைத்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்த விலையுயர்ந்த மதுபானத்தை அங்கேயே அமர்ந்து குடித்துவிட்டு லிப்ஸ்டிக்கால் 'ஒரு நூறு ரூபாய் வைக்க மாட்ட' என சுவற்றில் எழுதியுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த நோட்டுப் புத்தகத்தில் 'ஒரு ரூபாய் கூட இல்ல எடுக்கல' எனவும் எழுதி சென்றுள்ளனர்.

மேலும் அடுத்தடுத்து இரண்டு கெஸ்ட் ஹவுசில் மர்மநபர்கள் பணம் நகை ஏதும் கிடைக்காததால் விரக்தியடைந்து சிசிடிவி கேமராவில் பதிவாகி விடுவோம் என்ற பயத்தில் சிசிடிவி ரெக்கார்டரை கையோடு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் கொள்ளையடிக்க வந்த இடத்தில் எதுவும் கிடைக்காததால் விரக்தியடைந்து தங்களுடைய ஆதங்கத்தை சுவற்றில் எழுதி சென்ற கொள்ளையர்களை பிடிக்க காவல் துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com