குண்டும் குழியுமாக மாறிய சாலை - தனி ஆளாக செப்பனிட்ட காவலர்!

குண்டும் குழியுமாக மாறிய சாலை - தனி ஆளாக செப்பனிட்ட காவலர்!

குண்டும் குழியுமாக மாறிய சாலை - தனி ஆளாக செப்பனிட்ட காவலர்!
Published on

குண்டும், குழியுமாக இருந்த சாலையை தனி ஒரு ஆளாக செப்பனிட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வரும் நிலையில், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் நகரின் பெரும்பாலான இடங்கள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதனைக்கண்ட கம்பம்பகுதி போக்குவரத்து காவலர் தாமரை மாணிக்கம், தனி ஆளாக மண்வெட்டி, ஜல்லி கற்கள் ஆகியவற்றைக்கொண்டு சாலையை சீரமைக்கத் தொடங்கினார். அவரைப்பார்த்த பொதுமக்கள் மாணிக்கத்திற்கு உதவ முன்வரவில்லை எனச் சொல்லப்படுகிறது.

இருப்பினும் மாணிக்கம் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து பணியைத் தொடர்ந்தார். 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலையை சீரமைத்து பள்ளங்களை சமன் செய்தார். அவரின் இந்த நடவடிக்கையால் தற்போது வாகன ஓட்டிகள் எவ்வித சிரமமின்றி சாலைகளில் பயணித்து வருகின்றனர். காவலரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. காவலரின் சேவைக்காக வெகுமதி வழங்கப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com