தமிழகத்தில் தனியார் பால் விற்பனை நிறுவனங்கள், பால் விலையை உயர்த்தியுள்ளன.
ஜெர்ஸி மற்றும் டோட்லா நிறுவனங்கள் பால் விலையை அதன் வகையைப் பொறுத்து, லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இதே போல் திருமலா மற்றும் ஹெரிடேஜ் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விலையை இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 2 முதல் 5 ரூபாய் வரை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்த வரை ஒரு நாளுக்கு ஒன்றரை கோடி லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில் அரசு நிறுவனமான ஆவின், 25 லட்சம் லிட்டரை விநியோகித்து வருகிறது. மீதமுள்ள ஒன்றே கால் கோடி லிட்டர் பால், தனியார் நிறுவனங்கள் மூலமும் மற்ற வழிகளிலும் பூர்த்தி செய்யப்படுகிறது.