கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம் துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் 12-க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக குமரிக்டல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் வீசி வந்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் விசைப்படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால், மீன் வரத்து குறைந்ததால் மீன் விலை அதிகரித்தே காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாககாற்றின் சீற்றம் கொஞ்சம் குறைந்த்தால், மீனவர்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனால் மீன் வரத்து அதிகரித்திருந்ததால், மீன் விலை சற்று குறைந்து காணப்பட்டது.