நாட்டின் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் மாநிலங்களின் சார்பில், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழகத்தின் சார்பில் கரகாட்டக் குழுவினருடனான ஊர்தி பங்கேற்றது. தமிழகத்தின் பாரம்பரிய இசைக்கருவிகளான தவில், நாதஸ்வரம் இசையுடன் அந்த ஊர்தி வலம்வந்தது. மேலும், குலசேகரம் தசாரா விழாவைப் பிரதிபலிக்கும் காளி உருவமும் ஊர்தியில் இடம்பெற்றிருந்தது. அலங்கார ஊர்தி அணிவகுப்பைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் ராஜபாதையில் தங்களது கலைத் திறமையை வெளிப்படுத்தினர். பின்னர் நடைபெற்ற ராணுவ வீரர்களின் பைக் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை பிரமிக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து, விமானப் படையின் போர் விமானங்கள் வானில் சாகசங்களை நிகழ்த்தின.