வடகிழக்கு பருவமழை எப்போதும் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கும் நிலையில், இந்தமுறை 15-ம் தேதியே தொடங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எப்போதும் நில்லாத வகையில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் அதி கனமழை பெய்யக்கூடும் என 15 மற்றும் 16-ம் தேதிகளில் எச்சரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில், எதிர்ப்பார்த்ததை போலவே அக்டோபர் 15-ம் தேதி காலை முதல் இரவுவரை சென்னையில் இடைவிடாத மழை பெய்து பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியதால் 16-ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட் உறுதிசெய்யப்பட்டும், மீட்பு நடவடிக்கைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
ஆனால் கடலுக்குள் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால் சென்னையில் மழை படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இன்று பிற்பகல் வெயில் தென்பட்ட நிலையில், சென்னைக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னயில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது விலக்கி கொள்ளப்பட்டதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான வாய்ப்பு என கூறப்பட்டிருந்த நிலையில், அதுவும் விலக்கிக் கொள்ளப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.