நதிநீர் திட்டத்தில் முறையான திட்டமிடல் இல்லை - தணிக்கை அறிக்கை

நதிநீர் திட்டத்தில் முறையான திட்டமிடல் இல்லை - தணிக்கை அறிக்கை
நதிநீர் திட்டத்தில் முறையான திட்டமிடல் இல்லை - தணிக்கை அறிக்கை
Published on

தமிழ்நாட்டில், 16 மாவட்டங்களுக்கு பயனளிக்கும் நதிநீர் திட்டம், முறையான திட்டமிடல் இன்றி தாமதமாக நிறைவேற்றப்படுவதால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் மற்றும் கடல் நீர் ஊடுருவலைத் தடுப்பது போன்ற நோக்கங்கள் நிறைவேறவில்லை என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நதி நீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்தாத காரணத்தால் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல் மற்றும் கடல்நீர் ஊடுருவலைத் தடுப்பது போன்ற நோக்கங்கள் நிறைவேறவில்லை என இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை அறிக்கை 2018-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் உள்ள நதிகளை இணைப்பதன் மூலம் நீர்வள ஆதாரங்களை மேம்படுத்த தமிழகத்தில் உள்ள 8 நதிகளை இணைக்கும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் 2 திட்டங்களுக்கு 2008ல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தாமிரபரணி-கருமேனி ஆறு-நம்பியாறு இணைப்புத்திட்டம் உள்ளிட்ட 6 திட்டங்கள் ஆரம்ப நிலையிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 3க்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், 16 மாவட்டங்களுக்கு பயனளிக்கும் நதிநீர் திட்டம், முறையான திட்டமிடல் இன்றி தாமதமாக நிறைவேற்றப்படுவதால் நீர்வளம் குறைந்த பகுதிகளுக்கு பாசன வசதி வழங்குதல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் மற்றும் கடல் நீர் ஊடுருவலைத் தடுப்பது போன்ற நோக்கங்கள் நிறைவேறவில்லை என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com