கடலூர் மாவட்ட ஆட்சியர் சென்ற பேருந்தை நிறுத்தி விளையாட்டு மைதானம் கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கடலூர் மாவட்டம் லட்சுமணபுரத்தில் நடைபெறும் மனுநீதி முகாமில் கலந்துகொள்ள, மாவட்ட ஆட்சியர் தண்டபாணி அதிகாரிகளுடன் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது திடீரென கீழ்கல்பூண்டி பகுதி மக்கள் ஆட்சியர் சென்ற பேருந்தை இடையில் மறித்ததால் சற்று பதற்றம் ஏற்பட்டது. அப்போது 15 ஆண்டுகாலமாக பயன்படுத்தி வந்த விளையாட்டு மைதானத்தை, இலவச மனையாக வழங்கியுள்ளதாக மக்கள் கூறினர்.
தற்போது அதனை ஆக்கிரமிப்பு அகற்றம் எனக் கூறி காலி செய்து விட்டதாகவும் அவர்கள் புகார் அளித்தனர். வீடுகள் அகற்றப்பட்டது ஒரு சோகம் என்றாலும், மீண்டும் தங்களுக்கு விளையாட்டு மைதானத்தையாவது திறக்க வேண்டும் எனக் கூறிய பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனுவை கொடுத்தனர். அதைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.